Home மாவட்டங்கள் பெங்களூர் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட73 கால்நடைகள் மீட்பு

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட73 கால்நடைகள் மீட்பு

பெங்களூர், நவ.9-
சட்டவிரோதமாக இறைச்சிக்கூடத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 73 கால்நடைகளை போலீசார் அதிரடியாக சோதனையிட்டு மீட்டுள்ளனர். இச்சம்பவம் நிலமங்கலா தாலுகா, தாபஸ்பேட்டை அருகேயுள்ள கூத்தகட்டா கிராமத்தில் நடந்துள்ளது.நிலமங்கலா டி.ஒய்.எஸ்.பி. உமாராணி தலைமையிலான காவல் துறையினர் இன்று அதிகாலை 2 மணியளவில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனையை நடத்தினர்.
அப்போது லாரியில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 70 எருமைகள் மற்றும் 3 பசுக்கள் உட்பட மொத்தம் 73 கால்நடைகள் மீட்கப்பட்டன. கால்நடைகளை கடத்திச் செல்லப் பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து காவலில் எடுத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.