Home செய்திகள் உலக செய்திகள் இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை

இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை

இஸ்லாமாபாத்: நவ. 12–-
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது.
74 வயதான இம்ரான் கானுக்கு கடந்த ஜனவரி முதல் வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்து வருகிறது. இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், கண் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின்படி, நவம்பர் 10-ம் தேதி இரவு முதல் 11-ம் தேதி வரையிலான நேரத்தில், இம்ரான் கான் பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில், அவரது கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீண்டும் அடியாலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.