Home செய்திகள் உலக செய்திகள் ஷேக்ஹசீனாவின் தண்டனையை நிறுத்த கோரிக்கை

ஷேக்ஹசீனாவின் தண்டனையை நிறுத்த கோரிக்கை

லண்டன்: நவ. 12–-
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் எட் மிலிபாண்டிற்கு அந்நாட்டைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா (வயது 79) பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் சட்ட நிறுவனத்தின் மூலம் டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம் அனுப்பியுள்ளார். தனது வங்காளதேச குடியுரிமையின் அடிப்படையில், புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை விரைவாக வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார். அடுத்த மாதம் நாடு திரும்பி, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.