Home தலைப்பு செய்தி காவேரி – தமிழக அரசு மனு தள்ளுபடி

காவேரி – தமிழக அரசு மனு தள்ளுபடி

டெல்லி: நவ. 20–
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. 11 டிஎம்சி தண்ணீர் பெண்டிங் உள்ளது. இந்த தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தமிழகத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த வழக்கில், ” கர்நாடகாவில் இருந்து வரவேண்டிய 11 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் பயிர்கள் கருகுவதை தடுக்க தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை குழு கூட்டங்களில் இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை” என தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதங்களை முன் வைத்திருந்தார். ஆனால், கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் விஷயம் திவான், ”கர்நாடகாவில்பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாலும்.. குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி இருப்பதாலும், தண்ணீரை திறந்து விட முடியாது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என்பதாலும், காவிரி ஆணையம் தொடர்ந்து நிலைமையில் கண்காணித்து வருகிறது என்பதாலும், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டியது இல்லை” எனவும் கர்நாடகா சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பின்படி சாதாரண மழை காலங்களில்.. தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா வழங்க வேண்டும். அதுவே, மழை குறைபாடு உள்ள ஆண்டுகளில்.. விகிதாச்சார அடிப்படையில் நீர் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இப்போது வறட்சி காலம் என்பதால் கர்நாடகா நமக்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை அதை அம்மாநில அரசு செய்யவில்லை என்பதுதான் பிரச்சினையாக வெடித்திருக்கிறது.
ஜூன் 1ம் தேதி தொடங்கி, ஜூலை 19ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 28.3 டிஎம்சி அளவுக்கு காவிரி நீர் நமக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 3.4 டிஎம்சி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. ஜூலை மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீருக்கு பதில், வெறும் 0.698 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. கடந்த 50 ஆண்டுகளில் நமக்கு கிடைத்த மிக குறைவான நீர் இதுவாகும். மழை சாதாரணமாக இருக்கும் காலங்களில், 177.25 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதுவே மழை எத்தனை சதவீதம் குறைவாகப் பெய்கிறதோ.. அதனை சதவீதம் அளவுக்கு தண்ணீரை குறைத்துக் கொண்டு, மீதமுள்ள தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். அதன்படி பார்த்தால் ஜூலை மாதம் முதல், கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய 16 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருக்கிறது. You may also like