Home பக்தி திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை

திருப்பதி, நவ. 22-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்க உள்ளார். இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் அவர் ஆலோசனைகளை முடித்துள்ளார். வரும் 26ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகளிடம் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட உள்ளன. மொத்தம் 9 தொகுப்புகளாக 45 தங்க நகைகளை அவர் வழங்குகிறார். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என்று ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நகைகளை காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனிநபர் ஒருவர் வழங்கும் காணிக்கைகளில் இதுவே மிகப்பெரியது என்று தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.