
தோகா, நவ. 26- இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் ஆதர்ச நாயகனான யுவராஜ் சிங்குடன் 30 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியது தனது ஆட்டத்தை மீண்டும் பாதைக்குக் கொண்டுவர உதவியதாகத் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டைச் சதம் அடித்தவர் என்ற சாதனைகளை படைத்திருந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது: யுவராஜ் சிங் சாருடன் சுமார் அரை மணி நேரம் தொலைபேசியில் பேசினேன். பேட்டிங் தொடர்பாக பல விஷயங்களை அவர் விளக்கினார்.
















