Home செய்திகள் தேசிய செய்திகள் உள்நாட்டுத் தங்கம் கையிருப்பு 740.1 டன்னாக அதிகரிப்பு

உள்நாட்டுத் தங்கம் கையிருப்பு 740.1 டன்னாக அதிகரிப்பு

டெல்லி: நவ. 26-
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு மேலாண்மை குறித்த அரையாண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் உள்நாட்டுத் தங்கம் கையிருப்பு 740.13 மெட்ரிக் டன்னாக (சுமார் 84%) உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 2026-ல் இது 680.05 டன்னாக (77%) இருந்தது இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது மொத்தம் 880.5 டன் தங்கக் கையிருப்பு உள்ளது. இதில் சுமார் 84% தங்கம் இந்தியாவிற்குள்ளேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 880.5 டன் தங்கத்தில் எஞ்சிய சுமார் 140.4 டன் தங்கமானது இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச செட்டில்மென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் பாதுகாப்பில் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளதாக
ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாட்டு வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது மொத்தம் 880.5 டன் தங்கக் கையிருப்பு உள்ளது. இதில் சுமார் 84% தங்கம் இந்தியாவிற்குள்ளேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.சுமார் 60.08 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical risks) காரணமாக, வெளிநாடுகளில் உள்ள தங்களது தங்க இருப்பைத் தாயகத்திற்கே கொண்டு வரும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது