Home மாவட்டங்கள் சென்னை கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகள் நடத்த அனுமதி

கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகள் நடத்த அனுமதி

சென்னை: நவ. 27-
தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனைக்கான மதுக்கடைகளை, அரசு நிறுவனமான டாஸ்மாக் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனைக்கான கடைகள் முன்பு தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2003-ம் ஆண்டு, சில்லரை கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் உரிமை அரசு நிறுவனமான டாஸ்மாக் வசம் வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே 4,048 மதுக்கடைகளை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்களின் செயல்பாடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள், மக்கள் தொகை மற்றும் உள்ளூர் தேவை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
மேலும், மாவட்ட வாரியாக செயல்படும் அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களின் விவரங்களை, டாஸ்மாக் நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது