Home செய்திகள் உலக செய்திகள் தலிபான் நிர்வாகம் தடை

தலிபான் நிர்வாகம் தடை

பால்க்: நவ. 28-
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியான பால்க் மாகாணத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்த தலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதிவேடுகள் மற்றும் மருந்துச் சீட்டுகளில் பெண்களின் இயற்பெயர்களை எழுதவோ, பொதுவில் உச்சரிக்கவோ கூடாது என தலிபான்களின் ஒழுக்கநெறி அமைச்சக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக ‘பீபி’ என்ற பொதுச் சொல்லைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரி மற்றும் பாஷ்டோ மொழிகளில் ‘பீபி’ என்பது ‘பாட்டி’ அல்லது ‘வயதான பெண்’ என்பதைக் குறிக்கும் பாரம்பரிய மரியாதைச் சொல்லாகும். பொதுவெளியில் பெண்களின் பெயரைச் சொல்வது குடும்ப கௌரவத்துக்கு இழுக்கு என்ற பழமைவாதக் கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தலிபான்கள் நியாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவு பால்க் மாகாணத்திலேயே நடைமுறையில் இருந்தாலும், நாடு முழுவதும் விரிவடையக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.