Home மாவட்டங்கள் சென்னை 14 நாட்களில் பதவியிழந்த அறங்காவலர்கள்

14 நாட்களில் பதவியிழந்த அறங்காவலர்கள்

மதுரை: நவ. 28-
தீபம் ஏற்​றும் விவகாரம் தொடர்​பான அவ​மதிப்பு வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், திருப்பரங்குன்றம் கோயில் அறங்​காவலர் குழு​வைக் கலைத்து உத்​தர​விட்​டுள்​ளது. இதன்​மூலம் பதவி​யேற்ற 14 நாட்​களி​லேயே அறங்​காவலர்​கள் 5 பேரும் பத​வியை இழந்​தனர்.
திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் அறங்​காவலர்​களாக 5 பேரை தவெக அரசு நியமித்து கடந்த நவ.13-ல் உத்​தரவு பிறப்​பித்​தது. ஏற்​கெனவே திமுக ஆட்​சி​யில் அறங்​காவலராக இருந்த வ.சண்​முகசுந்​தரம் மற்​றும் சி.ராஜபாண்​டியன், க.அழகப்​பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் அறங்​காவலர்​களாக நியமிக்​கப்​பட்​டனர்.
இவர்​கள் அனைவரும் நவ.13-ம் தேதி கோயில் துணை ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொறுப்​பேற்​றனர். அன்றே அறங்​காவலர் குழுத் தலை​வர் பத​விக்​கான தேர்​தலை நடத்தி, வ.சண்​முகசுந்​தரம் தலை​வ​ராகத் தேர்​வானார்.
உச்ச நீதி​மன்​றத்​தில் கார்த்​திகை தீப விவகாரம் தொடர்​பான வழக்கு நவ. 14-ல் விசா​ரணைக்கு வரு​வ​தால், நவ. 13-ல் ரகசியமாக அறங்​காவலர்​கள் நியமனமும், பத​வி​யேற்பு விழாவும் நடந்​த​தாக சர்ச்சை எழுந்​தது. இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்​ற உத்தரவால், பதவி​யேற்ற 14 நாட்​களில் அறங்​காவலர்​கள் 5 பேரும் பதவியை இழந்துள்ளனர்.
அறங்காவலர் குழு பின்னணி: அறங்காவலர் குழுத் தலைவரான வ.சண்முகசுந்தரம், தனியார் நிறுவனத்தில் பிஆர்ஓவாக பணியாற்றியவர். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர். அறங்காவலர் சி.ராஜபாண்டியன் மதுரை திருநகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி. மற்றொரு அறங்காவலர் க.அழகப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி.
இவர் தீபம் ஏற்றுவதற்கு எதிராக ஊடகங்களில் கருத்துகளைச் சொன்னவர். அறங்காவலர் ரெஜினாதேவியின் கணவர் வாடிப்பட்டி பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். மற்றொரு அறங்காவலர் சித்ரா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் செல்லையாவின் உறவினர் பரிந்துரையில் இப்பதவிக்கு வந்தவர் என கூறப்படுகிறது.