Home மாவட்டங்கள் பெங்களூர் விபத்துகளில் தந்தை-மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்

விபத்துகளில் தந்தை-மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்

தாவணகெரே, நவ. 28–-
ஹரிஹர தாலுகா தீட்டூர் கிராஸ் அருகே வேகமாக வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஹரிஹர நகர் ஆஸ்ரய காலனியை சேர்ந்த மனோஜ் (35), அவரது 3 வயது மகள் திருதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்கில் பயணம் செய்த மனோஜின் மனைவி நந்தினி மற்றும் மேலும் இரு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. மூவரும் சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நந்தினியின் தாய் வீட்டில் நடைபெற்ற விழாவை முடித்துவிட்டு, கல்பனஹள்ளியில் இருந்து ஹரிஹரவுக்கு பைக்கில் குடும்பத்தினர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. தம்பதி மற்றும் 3 குழந்தைகள் பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹரிஹர கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கவிழ்ந்து ஒருவர் பலி
ஹொசநகர தாலுகா ரிப்பன்பேட்டை அருகே உள்ள ஹெத்தாரிபுர கிராமம் அருகே ஜம்பள்ளி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இதில், காகிதங்களை ஏற்றிச் சென்ற கார் கவிழ்ந்ததில் சிவமொக்காவை சேர்ந்த சிவகுமார் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த தீர்த்தஹள்ளியை சேர்ந்த மற்றொரு சிவகுமார் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சிவமொக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீர்த்தஹள்ளிக்கு தினசரி செய்தித்தாள்களை விநியோகித்துவிட்டு ரிப்பன்பேட்டை திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரிப்பன்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.