Home மாவட்டங்கள் சென்னை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 சரிவு

சென்னை, செப். 28-
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலகப் பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வரும் நிலையில், அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. மேலும், கடந்த 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, “தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்” என்று நாட்டு மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,765-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.1,880 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,120-க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,048 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,20,136-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,280-க்கும் விற்பனை ஆகிறது.