Home Uncategorized போலி வீடியோ என இந்திய ராணுவம் விளக்கம்

போலி வீடியோ என இந்திய ராணுவம் விளக்கம்

புதுடெல்லி: அக். 27-
இந்தோ- திபெத் எல்லை பாது​காப்​புப் படை​யின் ஷெளர்யா கமாண்டோ பிரிவு அருணாச்சல பிரதேச எல்​லைப் பகுதி​களில் சீன வீரர்​களை தீரத்​துடன் எதிர்த்​துப் போராடி வருகிறது என்று அந்த படை​யின் தலைமை இயக்​குநர் சத்​ருஜித் சிங் கபூர் சில நாட்​களுக்கு முன்பு குறிப்​பிட்​டார்.
இதைத் தொடர்ந்து அருணாச்​சல பிரதேசத்​தில் சீன வீரர்​கள் ஊடுரு​வி​யிருப்​ப​தாக சில வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன. இது​தொடர்​பாக அருணாச்​சல பிரதேச காங்கிரஸ் தலை​வர் போசிராம் சிரம், பாசிகாட் நகரில் நேற்று நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார்.
அவர் கூறும்​போது, “அருணாச்​சல பிரதேசத்​தில் சுார் 50 கி.மீ. தொலை​வுக்கு சீன வீரர்​கள் ஊடுரு​வி​யிருப்​ப​தாக தகவல்​கள் வெளியாகி வரு​கின்​றன. எல்லை​யில் வசிக்​கும் மாநில மக்​கள் சுதந்​திர​மாக நட​மாட முடிய​வில்லை. இந்த பிரச்​சினையை மத்திய அரசு மிக தீவிர​மாக எடுத்​துக் கொள்ள வேண்​டும்” என்றார்.
இது​தொடர்​பாக இந்​திய ராணுவம் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 27-ம் தேதி ஜம்மு காஷ்​மீர் நில​வரம் குறித்து இந்​திய ராணுவ மேஜர் ஜெனரல் கிரிஷ் காளியா, குப்​வாரா பகுதியில் நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார்.
அப்​போது அவர் “காஷ்மீர் எல்லை​யில் 10 ஊடுரு​வல் முயற்​சிகள் முறியடிக்கப்பட்டன. 27 தீவிர​வாதி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்” என்றார். அவரது வீடியோ செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் மூலம் எடிட் செய்​யப்​பட்டு, போலி வீடியோ சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளது.
அந்த போலி வீடியோவில், அருணாச்​சல பிரதேசத்​தின் அசாபிலா, லாங்ஜோ, டாக்​ஸிங் பகுதி​களில் சீன வீரர்​கள் ஊடுரு​வி​யிருப்​ப​தாகவும் இந்​திய ராணுவ வீரர்​களுக்கு அத்​தி​யாவ​சிய பொருட்​கள் கிடைக்​க​வில்லை என்​றும் மேஜர் ஜெனரல் கிரிஷ் காளியா கூறு​வ​தாக சித்​தரிக்​கப்​பட்டு உள்​ளது. இது போலி, டீப்​பேக் வீடியோ ஆகும். இதுபோன்ற வீடியோக்​களை நம்ப வேண்​டாம். இந்​திய எல்​லைப் பகுதி​யில் சீன வாக​னங்​கள் நுழைந்​திருப்​ப​தாகவும் போலி வீடியோக்​கள் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. இந்த சீன வாக​னங்​கள் சிக்​கி​மின் நாதுலா கணவாய் வழி​யாக சென்ற சரக்கு வாக​னங்​கள் ஆகும்.