Home விளையாட்டு முன்னேற்ற பாதையில் இந்தியா: ஆசிய விளையாட்டு செயல்பாடு எப்படி?

முன்னேற்ற பாதையில் இந்தியா: ஆசிய விளையாட்டு செயல்பாடு எப்படி?

நகோயா, அக். 5- ஆசிய விளையாட்டில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பாட்மின்டனில் சோபிக்க தவறியதால், பதக்க எண்ணிக்கை குறைந்தது. ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடந்தது. இதில் 169 தங்கம் உட்பட 341 பதக்கம் கைப்பற்றிய சீனா, தொடர்ந்து 12வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய ஜப்பானுக்கு (83 தங்கம் உட்பட 269 பதக்கம்) 2வது இடம் கிடைத்தது. வில்வித்தையில் முன்னேற்றம்: இம்முறை வில்வித்தையில் இந்திய நட்சத்திரங்கள் முன்னேற்றம் கண்டனர். வலிமையான தென் கொரிய நட்சத்திரங்களை சமாளித்த இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 9 பதக்கம் கைப்பற்றினர். இதில் கும்கும், சிகிதா, சாஹில் சவுத்ரி தலா 2 தங்கம் கைப்பற்றினர். துப்பாக்கி சுடுதலில் கலக்கிய நீரூ தண்டா, ஆசிய விளையாட்டு ‘டிராப்’ தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். தடகளத்தில் அசத்திய தமிழகத்தின் வித்யா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கங்களை தட்டிச் சென்றார். கோல்ப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பிரனவி உர்ஸ், முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தார். தற்காப்பு கலை, சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைத்தது. பெண்கள் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.