
பிர்னோ: நவ.4-
செக் குடியரசின் பிர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் கிரெக் லோபனை வேலவன் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வேலவன் செந்தில்குமார் 13-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் கிரெக் லோபனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன் மூலம் செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் வேலவன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
















