
தோஹா, நவ. 4- ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. ரவிந்தர் சிங், சவுரப் சவுத்திரி, அமன்பிரீத் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1,659 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.சீனா அணி (1,648) வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி (1,643) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. இளவேனிலுக்கு வெள்ளி: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன், சோனம் உத்தம் மஸ்கர், சாம்பவி ஷிராவன் சிர்சாகர் ஆகியோர் அடங்கிய அணி 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றது. இப்பிரிவில் சீனா தங்கமும், ஜப்பான் வெண்கலமும் வென்றது.
















