Home மாவட்டங்கள் சென்னை உள்ளாட்சி வரியை உயர்த்த பரிந்துரை

உள்ளாட்சி வரியை உயர்த்த பரிந்துரை

சென்னை, செப். 18- உள்ளாட்சிகளில் வரியை உயர்த்தி, வருவாயை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக, ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்தார்.தமிழக அரசின் ஏழாவது மாநில நிதி ஆணையமும், மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த, ‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுமை மற்றும் நிதியை வலுப்படுத்தல்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம், சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கில், மத்திய நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோவிந்தராவ், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், “உள்ளாட்சி அமைப்புகள் தங்களுடைய சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த வேண்டும்,” என்றார்.மத்திய நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோவிந்த ராவ் பேசுகையில், “தன்னிறைவு பெற்ற உள்ளாட்சி அமைப்புகளால்தான் நல்ல ஆட்சி முறையை வழங்க முடியும். அதற்கு, பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் ஆளுகையின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு வர வேண்டும்,” என்றார்.கருத்தரங்கின் நிறைவில், ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு எவ்வளவு நிதிப் பகிர்வு இருக்க வேண்டும்.