Home மாவட்டங்கள் பெங்களூர் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: செப். 3:
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து இன்று முதல் சனிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு தினமும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து இடங்களிலும் இருந்து ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல இன்றைய தினத்திற்கு 14,016 பேரும், நாளைக்கு 8,688 பேரும், நாளை மறுநாளுக்கு 6,459 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை பயணத்துக்கு 14,239 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.