Home செய்திகள் உலக செய்திகள் டிரம்புக்கு எதிராக மாறும் வாக்காளர்கள்: கருத்துக்கணிப்பு

டிரம்புக்கு எதிராக மாறும் வாக்காளர்கள்: கருத்துக்கணிப்பு

வாஷிங்டன், அக். 28-
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு வாக்களித்த தெற்காசிய அமெரிக்கர்களில் 25 சதவீதம் பேர், இம்முறை ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ‘இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட்’ என்ற அமைப்பு 800 தெற்காசிய வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் 87 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.டிரம்புக்கு வாக்களித்தவர்களில் 67 சதவீதம் பேர் தொடர்ந்து குடியரசுக் கட்சியையே ஆதரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அவர்களில் சுமார் கால்வாசிப் பேர் ஜனநாயகக் கட்சிக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு வாக்களித்தவர்களில் 96 சதவீதம் பேர், இம்முறையும் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர். டெக்சாஸ், மிச்சிகன் போன்ற போட்டி நிலவும் மாகாணங்களில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என ‘இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட்’ அமைப்பு தெரிவித்துள்ளது.