Home மாவட்டங்கள் சென்னை தவெகவால் குமுறிய எடப்பாடி பழனிசாமி

தவெகவால் குமுறிய எடப்பாடி பழனிசாமி

சென்னை, அக். 5- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆட்சி தொடர இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.
தங்கள் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால், தவெகவுக்கு பதிலடி அதிமுக வேகம் காட்டுகிறது. திமுகவும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கரூர் விஷயத்தில் உங்களுக்கு நல்லது நினைச்சதுக்கு, எங்கள் எம்எல்ஏக்களை திருடுவீர்களா என தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் அரசியல் தலைவரின் வாரிசோ அல்லது சினிமா நடிகரோ இல்லை. நான் உங்களில் ஒருவன். உங்கள் ஊரில் தெருவில் வீட்டில் பார்க்கும் அண்ணன், சித்தப்பா, பெரியப்பா மாதிரி எளிய மனிதன் எடப்பாடி பழனிசாமி. எனக்கு அடுக்கு மொழியில் ஏற்ற இறக்கங்களுடன் ரசிகர்களை மயக்கும் வகையில் போலி வசனம் பேச தெரியாது. நான் கீழே இருந்து வந்தவன். அதனால் தான் என்னவோ மற்ற எல்லா கட்சி தலைவர்களைவிட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிராக அத்தனை சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன.