Home மாவட்டங்கள் பெங்களூர் மைசூர் தசரா நாளை துவக்கம்: ஜலரிஷி கவிசித்தேஸ்வர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்

மைசூர் தசரா நாளை துவக்கம்: ஜலரிஷி கவிசித்தேஸ்வர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்

மைசூர்: அக்.10:
மைசூர் தசரா விழா 2026 நாளை அக்டோபர் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், 11 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு மைசூர் நகரம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டின் தசரா விழாவை கொப்பளத்தின் கவிமடத்தின் பீடாதிபதி பரமபூஜ்ய ஸ்ரீ அபினவ கவிசித்தேஸ்வர மகாசுவாமிகள் தொடங்கி வைக்கவுள்ளார்; ‘ஜலரிஷி’ என்று புகழ்பெற்ற 49 வயதான ஸ்ரீகள், வட கர்நாடகாவில் நீர் பாதுகாப்பிற்காகவும், 5,000-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியதற்காகவும் மக்களிடம் பெருமதிப்பைப் பெற்றுள்ளார். தசரா வரலாற்றில் விழாவைத் தொடங்கி வைக்கும் 7-வது ஸ்ரீகள் இவர் என்பதுடன், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு துறவி தசரா விழாவைத் தொடங்கி வைப்பது இதுவே முதல் முறையாகும்.
நாளை காலை சாமுண்டி மலையில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலில் காலை 11.50 மணி முதல் 12.13 மணி வரையிலான தனுர் லக்ன சுப முகூர்த்தத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. முதல்வர் டி.கே.சிவகுமார், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் யதீந்திர சித்தராமையா உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சாமுண்டி மலையில் பொதுமக்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலை 11.50 மணிக்கு தசரா விழா தொடக்கம், மதியம் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறும் தசரா பொருட்காட்சி தொடக்கம், மாலை 6 மணிக்கு அரண்மனையில் நந்தி கொடி பூஜை, மாலை 7 மணி முதல் 10 மணி வரை அரண்மனை உட்பட 146 கி.மீ சாலைகள் மற்றும் 118 வட்டங்களில் மின் விளக்கு அலங்காரத் தொடக்கம் ஆகியவை நடைபெறுகின்றன.
அக்.11-21 தசரா விழா, அக்.13-17 உத்தரஹள்ளியில் யுவ தசரா (ரகு தீட்சித், சித் ஸ்ரீராம், ஷான் பங்கேற்பு), அக்.16 சரஸ்வதி பூஜை, அக்.18-19 வரலாற்றிலேயே முதல் முறையாக சாத்தகள்ளியில் தசரா கம்பளா போட்டி, அக்.18-20 சூரியகிரண் விமானப் படை சாகசக் காட்சி, அக்.17-18 ட்ரோன் காட்சி, அக்.20 மகாநவமி ஆயுத பூஜை, அக்.21 விஜயதசமி அன்று மதியம் அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை தங்க அம்பாரியில் சாமுண்டேஸ்வரி சிலை வீதி உலா வரும் ஜம்பூ சவாரி மற்றும் மாலை தீப்பந்த அணிவகுப்பு ஆகியவை நடைபெறவுள்ளன.
தசரா பாதுகாப்பிற்காக 6,719 காவலர்கள், 33 கே.எஸ்.ஆர்.பி படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்காக 18 இடங்களில் காவல் உதவி மையங்கள் மற்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஜம்பூ சவாரி செல்லும் பாதையில் உள்ள 92 பழுதடைந்த கட்டிடங்கள் மீது நின்று வேடிக்கை பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்களைக் கண்காணிக்க 20 சமூக வலைதளக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மைசூர் தசரா விழாவை வரவேற்கத் தயாராக உள்ளது;