
சென்னை, அக். 22-
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ராஜராஜ சோழனின் புகழை எடுத்துரைத்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பல்வேறு துறைகளிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன். அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடுவதற்காக, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், சோழர் காலத்தின் சிறப்புகளைத் துறைவாரியாக இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வர வேண்டும் என்ற பேரார்வத்துடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான விதையை திராவிட மாடல் ஆட்சியில் ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாக வளர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பழக்கதோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்” என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், “அரசர்க்கரசரின் புகழ் வாழ்க” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.















