
பாட்னா, நவ. 20-
பீஹார் மாநிலத்தில் ரூ.5,500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கச்சி தர்கா–ரகோபூர்–பிதுபூர் ஆறு வழிப் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.பாட்னா மாவட்டத்தில் உள்ள கச்சி தர்காவையும், ரகோபூர் வழியாக வைஷாலி மாவட்டத்தில் உள்ள பிதுபூரையும் இந்தப் பாலம் இணைக்கிறது. பீஹாரின் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தப் பாலத்துக்கு ‘நிதீஷ் சேது’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பாட்னா–வைஷாலி இடையேயான பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்களாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹாத்மா காந்தி சேது பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாலத்துக்கு நிதீஷ் குமார் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் பெயரைப் பாலத்துக்கு சூட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.













