Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து

அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து

வாஷிங்டன், ஜூலை 22-
அமெரிக்காவில் படித்துக்கொண்டு தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுகை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் விசா விதிகளில் மிக முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது அமலில் உள்ள நடைமுறையின்படி, எப் – 1 விசா வைத்திருக்கும் மாணவர்கள், ‘டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்’ என்ற சலுகையின் கீழ் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது, அவர்களின் படிப்பு முடியும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். வரும், செப்.,15க்கு பின் அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மட்டுமே எப் – 1 விசா அனுமதி வழங்கப்படும். மேலும், படிப்பு முடிந்த பின் தாய்நாடு திரும்புவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் கால அவகாசம், 30 நாட்களாக குறைக்கப்படுகிறது. அதற்கு மேல் தங்க வேண்டியிருந்தால், தனியாக அனுமதி நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். எனவே சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மாணவர்கள், செப்., 15-ம் தேதிக்கு முன்பாகவே அமெரிக்காவிற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.