Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூருவில் இடிக்கப்படும் அடுக்குமாடி கட்டிடம் – என்ன காரணம்

பெங்களூருவில் இடிக்கப்படும் அடுக்குமாடி கட்டிடம் – என்ன காரணம்

பெங்களூரு, ஜூலை 24- பெங்களூருவின் பரபரப்பான ஓசூர் சாலைக்கு அருகிலுள்ள குட்லு பகுதியில் “SNN ராஜ் எட்டர்னியா” என்ற சொகுசு குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு டவருக்கு அரசாங்கத்திடம் இருந்து OC (Occupancy Certificate) எனப்படும் ஆக்குபன்சி சான்றிதழ் கிடைத்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், அந்த டவரை இடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வீடு வாங்கிய 49 குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. பல கோடி ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கியவர்கள் தங்களின் சொத்து மற்றும் எதிர்காலம் குறித்து அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். பெங்களூருவின் குட்லு பகுதியில் “SNN ராஜ் எட்டர்னியா” என்ற குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் 15 டவர்களும், 972 வீடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 கோபுரங்கள் எந்தவிதமான பாதிப்பும் இல்லால் பாதுகாப்பாக உள்ளன.. எனவே அதிலுள்ள 822 வீடுகளுக்கான சாவிகள் ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. பெங்களூரு சொகுசு டவர் ஆனால், 49 வீடுகள் கொண்ட அந்த ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில், புதிய வீடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லை.. காரணம், “வாட்டர் லோட் டெஸ்ட்” எனப்படும் தண்ணீரை ஊற்றி பாரத்தை டெஸ்ட் செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கட்டிடம் லேசாக சாய்ந்திருப்பது கண்டறியப்பட்டது. கட்டிடம் ஒரு பக்கமாகச் சாய துவங்கியதுமே, அஸ்திவாரம் கொஞ்சம் கீழ்நோக்கி அமுங்குவதும் அந்த ஆய்வில் தெரியவந்தது. உடனே அந்த நிலத்தின் மண் தன்மையை மறுபடியும் மறுபரிசோதனை செய்திருக்கிறார்கள்.. அப்பொழுதுதான் ஆரம்பத்தில் மண் பரிசோதனை செய்த பொறியியல் ஆலோசகர், மண்ணின் தாங்குதிறன் தொடர்பான தரவுகளை தவறாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது.