
சென்னை: செப். 3:
தமிழக சட்டப்பேரவையில், “முந்தைய திமுக ஆட்சியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் செய்தியறிக்கை வெளியிட்டு அவர் கூறியதாவது: “தவெக அரசு மே 10 முதல் பொறுப்பேற்று, ஜனநாயக நெறிமுறைகளை கடைப்பிடித்து, ஊழலற்ற அரசாக செயல்பட்டு வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை ஆகியவற்றை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு கோரிக்கைகளை முன்வைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் 2021 மே முதல் 2026 ஏஆசிரியர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால் இன்று வரை பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.













