Home மாவட்டங்கள் சென்னை ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு

ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு

சென்னை, செப். 15–-
15-09-2026: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுக முப்பெரும் விழாவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘அண்ணா விருது’ சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘கலைஞர் விருது’ துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘பாவேந்தர் விருது’ மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘பேராசிரியர் விருது’ தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘மு.க.ஸ்டாலின் விருது’ இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், “2026-ம் ஆண்டுக்கான ‘முரசொலி செல்வம் விருது’ ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று (15-09-2026) மாலை நடைபெறவிருந்த அந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த விழா, புதிய நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.