Home மாவட்டங்கள் பெங்களூர் மனைவியை கொன்ற கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியை கொன்ற கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூர்: செப்.19-
தொட்டபள்ளாபுரா அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவியை ஐடி கார்டு டேப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிய கணவன், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொட்டபள்ளாபுரா கிராமப்புற காவல் நிலையம் அருகிலுள்ள லாட்ஜில், மனைவி வித்யாவை (21) கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கொலை செய்துவிட்டு தப்பிய கணவன் ஆனந்த், கௌரிபிதனூர் தாலுகா மதுகெரே கிராமத்தில் உள்ள ஏரி அருகே தற்கொலை செய்துகொண்டார்.
ஏரி அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, மது அருந்திய ஆனந்த், அங்கிருந்த வேலிகாட்டான் (ஜாளி) மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மரத்தின் அடியில் மது பாட்டில், சிகரெட் பாக்கெட் ஆகியவை சிக்கிய நிலையில், ஆனந்தின் பாக்கெட்டில் இருவரின் மொபைல் போன்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உடல் முற்றிலும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கௌரிபிதனூர் கிராமப்புற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.