
சண்டிகர், அக். 22-
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவருக்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச உணவுப் பொருட்கள் வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக, அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் பாரிஸ் சென்றிருந்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியேற அவர் முயன்றபோது, சுங்கத் துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் அவரது உடைமைகளைச் சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில், பகவந்த் மான் அறிவிக்கப்படாத பொருட்களைக் கொண்டு வந்ததாகக் கூறி, அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது பஞ்சாபியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என அந்தக் கட்சி கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் பல்டேஜ் பன்னு வெளியிட்ட அறிக்கையில், “இரவில் டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் பகவந்த் மான் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டு, 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.















