Home செய்திகள் தேசிய செய்திகள் போலீசாரின் சேவைக்கு பிரதமர் மோடி பாராட்டு

போலீசாரின் சேவைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி: அக். 21-
தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி, போலீசாரின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
போலீஸ் நினைவு தினம் என்பது, மிகவும் சவாலான சூழல்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் தருணமாகும். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றச் செயல்களைத் தடுப்பது, அவசர காலங்களில் விரைந்து செயல்படுவது, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் போலீசாரின் பங்களிப்பு ஈடு இணையற்றது.
கடமையாற்றும்போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போலீசாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை என்றென்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.