Home விளையாட்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அசத்தல்

இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அசத்தல்

சென்னை, நவ. 8-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி மழையால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி இந்திய அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டம் மழை மற்​றும் மைதான ஈரப்​ப​தம் காரண​மாக 47 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்​டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41 ஓவர்​களில் 134 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக டேரில் மிட்​செல் 104 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியுடன் 31 ரன்​களும் எடுத்​தனர். வில் யங் 6, டிம் ஷெய்​பர்ட் 0, ஹென்றி நிக்​கோல்ஸ் 11, டாம் லேதம் 7, கிளென் பிலிப்ஸ் 0, நேதன் ஸ்​மித் 3, கைல் ஜேமிசன் 7, பிளேர் டிக்​னர் 2 ரன்​களில் நடையை கட்​டினர்.
இந்​திய அணி தரப்​பில் குர்​னூர் பிரார் 10 ஓவர்​களை வீசி 2 மெய்​டன்​களு​டன் 30 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். அகிப் நபி, அன்​ஷுல் கம்​போஜ், அக்​சர் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். அர்​ஷ்​தீப் சிங் 7 ஓவர்​களை வீசி ஒரு மெய்​டனுடன் 16 ரன்​களை மட்​டுமே வழங்​கிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​றவில்லை. இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் ஒட்​டுமொத்​த​மாக 176 ‘டாட் பால்​களை’ வீசி அசத்​தி​யிருந்​தனர். இதையடுத்து 135 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி​யும் சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை இழந்து நெருக்​கடியை சந்​தித்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் 0, விராட் கோலி 7 ரன்​களில் நடையை கட்​டினர். அதிரடி​யாக விளை​யாடிய ரோஹித் சர்மா 28 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 23 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்​கிய அக்​சர் படேல் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார்.