Home செய்திகள் தேசிய செய்திகள் பம்பை ஆற்றில் துணிகளை வீச வேண்டாம்: அமைச்சர்

பம்பை ஆற்றில் துணிகளை வீச வேண்டாம்: அமைச்சர்

சபரிமலை, நவ. 9-
சபரிமலையில் வரும் 16-ஆம் தேதி தொடங்க உள்ள மண்டல பூஜைக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் ஆடைகள் மற்றும் காலணிகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பல் துலக்கிய பிறகு ஆற்றில் எச்சில் துப்புவதையும் தவிர்க்க வேண்டும். பம்பை ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆற்றில் ஆடைகள் மற்றும் காலணிகளை வீசுவது எந்தவொரு மத வழக்கத்திலோ அல்லது சம்பிரதாயத்திலோ இடம்பெறவில்லை. எனவே, பக்தர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.சபரிமலை சீசனுக்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான பணிகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.