
பெங்களூரு, நவ. 9-
பல நாட்களாக நெலமங்களா அருகே உள்ள ஹஞ்சீபுரா கிராமத்து விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி வந்த சிறுத்தை ஒன்று வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
சிறுத்தை பிடிபட்டதை அடுத்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கடந்த பல நாட்களாக இந்த சிறுத்தை ஹஞ்சீபுரா கிராமத்தைச் சேர்ந்த பாலராஜு மற்றும் கெம்பேகௌடா என்பவர்களது தோட்டத்து வீடுகளின் அருகே அடிக்கடி நடமாடி வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளிடையே கடும் பீதி நிலவி வந்தது.
சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கிராம மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த வனத்துறை அதிகாரிகள் பாலராஜு மற்றும் கெம்பேகௌடா ஆகியோரின் தோட்டத்தில் கூண்டு அமைத்திருந்தனர். தற்போது சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளதால், பல நாட்களாக அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நெம்மதியாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.













