Home செய்திகள் தேசிய செய்திகள் உயர் நீதிமன்றங்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு இல்லை

உயர் நீதிமன்றங்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு இல்லை

புதுடெல்லி, நவ. 12-
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி ஸ்ரீனிவாசா அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, எதிர்மனுதாரர்களான சென்னையைச் சேர்ந்த சாய் மகாலட்சுமி டிரேடர்ஸ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடக் கூடாது என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட வகை வழக்கை விசாரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட உயர் நீதிமன்றம் மற்ற உயர் நீதிமன்றங்களைவிடச் சிறந்தது என்று கருதுவது தவறானது என்று தெரிவித்தனர். 90“உயர் நீதிமன்றங்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கிடையாது. ஒரு குறிப்பிட்ட வகை வழக்கை விசாரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட உயர் நீதிமன்றம் மற்றவற்றைவிடச் சிறந்தது என்று கருதுவது தவறானது” என்று நீதிபதிகள் கூறினர்.