Home செய்திகள் உலக செய்திகள் போர் நிறுத்தம் ரஷ்யா உக்ரைன் ஒப்புதல்: ட்ரம்ப் தகவல்

போர் நிறுத்தம் ரஷ்யா உக்ரைன் ஒப்புதல்: ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன், அக். 12- எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற எரிசக்தி போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதள பதிவில், “ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் எரிசக்தி போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதை முறித்துக் கொள்ள வேண்டாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதை ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். ‘சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு டீசலை விநியோகம் செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது’ என்று ட்ரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் எரிசக்தி போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.