Home விளையாட்டு இந்தியாவிடம் வீழ்ந்த கஜகஸ்தான்

இந்தியாவிடம் வீழ்ந்த கஜகஸ்தான்

நகோயா, செப்டம்பர் 21- ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணி பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கஜகஸ்தானைத் தோற்கடித்தது. நகோயாவிலுள்ள இச்சினோமியா நகரசபை ஜிம்னாசியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, கஜகஸ்தானின் கமீலா ஸ்மாகுலோவாவை 21-7, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் உன்னதி ஹூடா, அலிசா குலேஷோவாவை 21-7, 21-10 என்ற கணக்கில் தோற்கடித்தார். மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் தன்வி சர்மா, டியானா நேம்நோவாவை 21-5, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். மூன்று ஒற்றையர் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, கஜகஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.