Home மாவட்டங்கள் சென்னை ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு

ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு

சென்னை: அக்.15–-
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி ஒரே நாளில் 118 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குவைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.