
புதுடெல்லி: அக்.15–-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா–கனடா உறவை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமாக ஆலோசித்தோம்.
இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான பலன்களை வழங்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குடைய உறவை கனடாவுடன் உருவாக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.













