Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஷமி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஷமி ஓய்வு

புதுடெல்லி, நவ. 7-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 13 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன்மூலம் 229 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதில் வெளிநாடுகளில் மட்டும் 153 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விதமான ஆடுகள சூழலுக்கும் ஷமியின் பந்துவீச்சு கச்சிதமாக பொருந்தும். அவரது பந்துவீச்சு அணுகுமுறை மிகவும் எளிதானதாக இருக்கும். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஷமி விளையாடி இருந்தார். அதன் பின்னர் மூன்று வித ஃபார்மெட்டிலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவும் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய 15 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு பட்டியலில் வைத்துள்ளதாக தகவல். இதில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ளார்.