
மும்பை, அக். 19-
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், மும்பையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகனான டைகர் ஷெராபுக்கு 36 வயதாகிறது. இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக உள்ளார். மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் டைகர் ஷெராப் பங்கேற்றார். விளையாட்டு முடிந்த பின்னர், ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றார். புஷ்பா பூங்கா பகுதிக்கு கார் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், டைகர் ஷெராபை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். அவர்கள் 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். அப்போது காருக்கு அருகே ஓர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் அந்த ஆட்டோ ஓட்டுநரும் குண்டுக் காயம் அடைந்தார்.













