
சென்னை, அக். 19-
பயணிகளின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, நெடுந்தொலைவு செல்லும் 11 விரைவு ரயில்களில் தூய்மைப் பணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: திப்ரூகர்–கன்னியாகுமரி ரயில் உள்பட 11 விரைவு ரயில்களில் தூய்மைப் பணிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ரயில்களில் பயணம் முழுவதும் சுத்தமான கழிப்பறைகள், உடனுக்குடன் குப்பைகளை அகற்றுதல், தண்ணீர் வசதி உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜாபர் அலி கூறினார்.














