
புதுடெல்லி: அக். 19-
இந்தியாவின் சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்துக்கு பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தது. இதையடுத்து, 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி முதல் இந்திய விமானங்கள் தனது வான்வெளியில் பறப்பதற்கு பாகிஸ்தான் முதன்முறையாகத் தடை விதித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ பதற்றம் தணிந்திருந்தாலும், தூதரக உறவுகள் இன்னும் சீராகவில்லை. இதன் காரணமாக, இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தற்போது மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வருகிற நவம்பர் 24-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.














