Home செய்திகள் தேசிய செய்திகள் பூட்டானில் பனி ஏரி உடைப்பு: டார்ஜிலிங்குக்கு ரெட் அலர்ட்

பூட்டானில் பனி ஏரி உடைப்பு: டார்ஜிலிங்குக்கு ரெட் அலர்ட்

புதுடெல்லி: அக். 30-
பூட்டானின் லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
லெம்தாங்க் பகுதியில் உடைந்த பனி ஏரியில் இருந்து வெளியேறும் நீர், மோ சு (Mo Chhu) நதி வழியாக சங்கோஷ் நதியை நோக்கிப் பாய்ந்து வருகிறது. இதனால், டார்ஜிலிங் மலைப்பகுதிகள், தெராய் மற்றும் துவார்ஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
டார்ஜிலிங் தொகுதி பாஜக எம்.பி. ராஜு பிஸ்தா, சங்கோஷ் நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு சமூக ஊடகப் பதிவு மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.