Home செய்திகள் தேசிய செய்திகள் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூர்: அக். 21-
மணிப்பூர் மாநிலம் கோங்​பால் அடிவாரப் பகுதியில்விறகு சேகரிக்​கச் சென்ற 3 மைதேயி இனப் பெண்கள் ஆயுதக் குழுக்​களால் கொல்​லப்​பட்​டனர்.
இதைக் கண்​டித்து நேற்று தொடங்​கிய 48 மணி நேர மாநில அளவி​லான பொது வேலைநிறுத்​தம் காரண​மாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
பல்​வேறு பகுதி​களில் வாக​னப் போக்​கு​வரத்து முடங்​கியதுடன், சாலைகள் வெறிச்​சோடிக் கிடக்​கின்​றன.
வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்ள மணிப்​பூர் பூர்​வகுடி மக்​கள் குழு (என்​பிசி), இத்​தாக்​குதலுக்​குக் காரண​மான ஆயுதக் குழுக்​கள் மீது உடனடி​யாகத் தகுந்த நட​வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அன்​றாடப் பிழைப்​புக்​காகக் காடுகளுக்​கும் பிற பகுதி​களுக்​கும் செல்​லும் பொது​மக்​களின் பாது​காப்பு குறித்து இந்​தச் சம்​பவம் மீண்​டும் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாகவும் தெரிவித்துள்ளனர். முழு அடைப்பு போராட்​ட்த்தில் மருத்​துவ சேவை​கள், வழிபாட்​டுத் தலங்​கள், அவசரத் தேவை​களுக்கு விலக்கு அளிக்​கப்​பட்​டு உள்​ளது.
ஆம்​புலன்ஸ், அவசர மருத்​துவ உதவி​கள் தடை​யின்​றிச் செல்​ல உதவும்படி் என்​பிசி வேண்டுகோள் விடுத்​துள்​ளது.