Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்

ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்

சென்னை: அக்டோபர் 30-
தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு கூட்​டுறவு அங்​காடிகளில் 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது. இந்​தத் திட்​டத்தை அமைச்​சர் காந்​திராஜ் சென்​னை​யில் இன்று தொடங்கி வைக்​கிறார்.தமிழகத்​தில் அரிசி, பருப்பு, வெங்​காயம், எண்​ணெய் உள்​ளிட்ட அத்​தி​யாவ​சி​யப் பொருட்​களின் விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களின் சுமையை குறைக்​கும் பொருட்டு தமிழக அரசு பல்​வேறு நட​வடிக்​கைகளை எடுத்​து​வரு​கிறது.வெங்​காயம், துவரம் பருப்பை அரசே கொள்​முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக வெளிச் சந்​தையைவிட குறைந்த விலை​யில் விற்​பனை செய்​து​வரு​கிறது.கூட்டுறவு கடைகளில் சன்​னரக அரிசி கிலோ ரூ.30-க்​கும், உளுத்​தம்​பருப்பு ரூ.140-க்​கும், பூண்டு, தனியா தலா ரூ.240-க்​கும், மிளகாய் ரூ.330-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.இதன் தொடர்ச்​சி​யாக, அத்​தி​ய​வாசி​ய​மான 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்​பானது கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் ரூ.200-க்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது.மாநக​ராட்​சிகள் அல்​லாத பகுதி​களில் செயல்​படும் கூட்​டுறவு மொத்த விற்​பனைப் பண்​டகசாலைகள், தொடக்​கக் கூட்​டுறவுப் பண்​டகசாலைகள் மற்​றும் கூட்​டுறவு விற்​பனைச் சங்​கங்​களின் 128 விற்​பனை நிலை​யங்​கள் மூலம் இந்​தத் தொகுப்பு விற்​பனை செய்​யப்​படும்.இதில் கடலைப் பருப்பு, பாசிப்​பருப்பு, புளி தலா 250 கிராம், கடுகு, மிளகாய், உளுத்​தம்​பருப்பு தலா 100 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் என மொத்​தம் 1,450 கிராம் எடை கொண்ட 10 வகை​யான மளி​கைப் பொருட்​கள் இடம்​பெறும்.இந்த 10 பொருட்​களும் ஒருங்​கிணைந்த மளி​கைத் தொகுப்​பாக மட்​டுமே விற்​கப்​படும். தனித்​தனியாக விற்​கப்​படாது. இந்த திட்​டத்தை கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​திராஜ் சென்​னை​யில் இன்று தொடங்கி வைக்​கிறார்.