Home மாவட்டங்கள் சென்னை வீடுகளுக்குள் மழைநீர் பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் மழைநீர் பொதுமக்கள் அவதி

சென்னை: ​அக். 19-
மாநகரில் நேற்று முன்​தினம் கொட்​டித்​தீர்த்த அதி​க​னமழை காரண​மாக திரு​வொற்​றியூர், ஆர்​.கே.நகர் பகு​தி​களில் வீடு​களுக்​குள் மழைநீர் புகுந்​த​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். பாரி​முனை​யில் அதி​கபட்​ச​மாக 36 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.வங்​கக்​கடலில் நில​விய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, சென்னை மற்​றும் அதன் புறநகர்ப் பகு​தி​களில் நேற்று முன்​தினம் மாலை முதல் நேற்று அதி​காலை வரை அதி​க​னமழை பெய்​தது. இதனால் மாநகரின் பல்​வேறு சாலைகளில் மழைநீர் தேங்​கி, கடும் போக்​கு​வரத்து நெரிசல் நில​வியது.என்​.எஸ்​.சி போஸ் சாலை, வட சென்​னை​யில் பட்​டாளம், தண்​டை​யார்​பேட்டை வ.உ.சி.நகர், திரு​வொற்​றியூரின் சில பகு​தி​கள், வேளச்​சேரி​யில் ஏஜிஎஸ் காலனி உள்​ளிட்ட பகு​தி​களில் வெள்​ளநீர் வீடு​களுக்​குள் புகுந்து பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர்.
அதி​கபட்​ச​மாக சென்னை பாரி​முனை​யில் 36 செமீ, எண்​ணூர் கத்​தி​வாக்​கத்​தில் 34 செமீ மழை பதி​வானது. பெரம்​பூர், வியாசர்​பாடி, வேளச்​சேரி, தாம்​பரம் உள்​ளிட்ட பெரும்​பாலான தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளநீர் தேங்​கியது.கணேசபுரம் சுரங்​கப்​பாலம், வியாசர்​பாடி சுரங்​கப் பாலப் பகு​தி​களி​லும் வெள்​ளநீர் தேங்​கியது. வேளச்​சேரி பகு​தி​யில் பேரிடர் மீட்பு படை​யினர் முகாமிட்​டுள்​ளனர்.
மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண மையங்​கள், 111 பொதுச் சமையலறை​கள் தயார் நிலை​யில் உள்​ளன. பால், மாவு, அரிசி, அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் மற்​றும் சுகா​தா​ரத் துடைப்​பாடைகள் அடங்​கிய அவசர​காலக் கரு​விப் பெட்​டகங்​கள் முன்​கூட்​டியே கொள்​முதல் செய்​யப்​பட்​டுத் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.
வெள்​ளநீர் தேங்​கிய பகு​தி​களில் பொது​மக்​களுக்கு மாநக​ராட்சி சார்​பில் 3 வேளை​யும் உணவு வழங்​கப்​பட்​டது.
1000-க்​கும் மேற்​பட்ட ராட்சத மோட்​டார் பம்​பு​கள், டிராக்​டரில் பொருத்​தப்​பட்ட நீர் இறைக்​கும் இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்ள நிலை​யில், தேவை​யான இடங்​களில் மோட்​டார்​களை பயன்​படுத்தி வெள்​ளநீர் வெளி​யேற்​றப்​பட்​டது. நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, மின் வாரி​யத் தலை​வர் ராஜேஷ் லக்​கானி, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்​ளிட்​டோர் சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களில் கள ஆய்​வில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.