Home செய்திகள் தேசிய செய்திகள் 24 ரன்களில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள்

24 ரன்களில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள்

ஹைதராபாத்: அக்.15–-
இந்திய கிரிக்கெட் அணி உடனான 4-வது டி20 ஆட்டத்தை 24 ரன்களில் வென்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாசினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முன்னதாக, நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது இரண்டு அணிகளும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. முதல் மூன்று ஆட்டங்களில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.இந்நிலையில், நான்காவது டி20 ஆட்டம் புதன்கிழமை (அக்.14) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.