
மைசூர்: செப். 29-
உலகப் புகழ்பெற்ற
மைசூர் தசரா – 2026 விழாவிற்கான அழைப்பிதழை வரவேற்புக் குழுவினர் தயார் செய்துள்ளனர்.
தசரா நிகழ்ச்சிகள் அனைத்தும் எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடைபெற வேண்டி, மைசூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சாமுண்டி மலைக்குச் சென்று தாய் சாமுண்டேஸ்வரி அம்மன் பாதத்தில் அழைப்பிதழை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.லக்ஷ்மிகாந்த ரெட்டி, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி யுகேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆர், சாமுண்டேஸ்வரி வளர்ச்சி அதிகாரசபையின் செயலாளர் ரூபா உட்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.













