Home செய்திகள் உலக செய்திகள் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் போருக்கு தயாராகிறது

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் போருக்கு தயாராகிறது

ஈரான், செப். 30-
ஐ.நா. பொதுக்கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை மத்தியஸ்த நாடுகள் வாயிலாக மீண்டும் தொடங்கியது. ஈரான் தரப்பில் முக்கிய கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள்முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் அதிகாரிகள், அமெரிக்காவில் உள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அபாஸ் அர்காச்சி தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா சார்பில் கத்தார் வழங்கிய இரண்டு பக்கத் திட்டத்தையும் ஈரான் நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஈரானின் கோரிக்கைகளை கத்தார் அதிகாரிகள், அமெரிக்கத் தரப்பில் ஜாரெட் குஷ்னர் தலைமையிலான குழுவிடம் சமர்ப்பித்தனர். ஈரான் அதிகாரிகள் ஏற்க முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருவதால், அவர்களுடன் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நவம்பர் மாத மிட்டேர்ம் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும் தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அடுத்த பெரிய தாக்குதலுக்காக ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் போருக்குத் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த தாக்குதல் புதுமையாகவும் கடுமையாகவும் இருக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.