Home செய்திகள் உலக செய்திகள் பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்

பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்

பிரேசிலா, அக். 4-
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாட்டின் தற்போதைய அதிபராக லுலா டி சில்வா பதவி வகித்து வருகிறார். இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் டி சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் மகன் பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத நிலையில், அதிக வாக்குகளைப் பெறும் முதல் இரு வேட்பாளர்கள் மட்டும் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அந்த மறுதேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறும். அதிபர் தேர்தலுடன்,
மாகாண கவர்னர்கள் மற்றும் மாகாண மந்திரிகளுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்களிக்க சுமார் 16 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.